ETV Bharat / state

கதறி அழுத வைகோ: கட்சி நிர்வாகி இறுதிச் சடங்கில் சோகம் - மதிமுக கட்சி நிர்வாகி இறுதி சடங்கில் வைகோ

வேலூர்: கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்குக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கதறி அழும் காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

vaiko
vaiko
author img

By

Published : Feb 15, 2020, 11:39 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளராகவும், அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த பன்னீர், இன்று காலை மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பன்னீரின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, கட்சி நிர்வாகிகளிடையே பன்னீருடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து பேசுகையில் மேடையிலேயே கதறி அழுதுவிட்டார். முன்னதாக இருக்கமாக அமர்ந்திருந்த வைகோ, அனைவர் மத்தியிலும் துக்கத்தை அடக்கமுடியாமல் கதறி அழுதது, அங்கு இறுக்கமான சூழலை ஏற்படுத்தியது.

கதறி அழும் வைகோ

இதனைக்கண்ட கட்சியினரும் அங்கிருந்த பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுதனர். இதனையடுத்து வைகோ பன்னீரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: ரஜினி அரசியலுக்கு வந்தால் மனதார வரவேற்போம் - ஆர்.பி.உதயகுமார்

Intro:வேலூர் மாவட்டம்

கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்கு கூட்டத்தில் கதறி அழுத மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Body:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரும் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கும் பன்னீர் அவர்கள் உடல் நலம் குன்றிய நிலையில் இன்று காலை மரணமடைந்தார். இதனையடுத்து இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பன்னீரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ கட்சி நிர்வாகிகள் பன்னீரை பற்றி பேசும்பொழுது மேடையிலேயே கண்ணீர் விட்டவாரு இருக்கமாக அமர்ந்திருந்தார். பின்பு பேசிய வைகோ பன்னீரைப் பற்றி பேசும்பொழுது துக்கத்தை அடக்கமுடியாமல் மேடையிலேயே கதறி அழுதார் அதனால் அங்கு இறுக்கமான சூழல் ஏற்பட்டது. இதைக்கண்ட கட்சியினரும் அங்கிருந்த பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுதனர் கட்சி நிர்வாகி பன்னீரின் குடும்பத்தாருக்கு வைகோ ஆறுதல் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.