வேலூர் ஆற்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் சோமு. இவர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும், எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் தன்னுடைய சொந்த தேவைக்காக பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது இயந்திரத்திலிருந்து திடீரென ஐந்தாயிரம் வெளியில் வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் வெளியில் இருந்தவர்களிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்தீர்களா எனப் பலரிடம் கேட்டுப் பார்த்துள்ளார். யாரும் அதற்கு உரிமை கோராததால், பணத்தை உரியவரிடம் சேர்ப்பதற்காக நீண்ட நேரம் ஏடிஎம் முன்பே காத்திருந்துள்ளார்.
இறுதியில் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளரிடம் நிகழ்ந்ததைக் கூறி, பணத்தைக் கொடுத்துள்ளார். உதவி ஆய்வாளரின் இந்தச் செயல் மக்கள் மத்தியி; நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய நேர்மையைப் பாராட்டி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் உள்ள அனைத்துக் காவலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். தற்போது சமூக வலைதளத்திலும் காவல் துறை அலுவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க:'பட ப்ரோமோஷனுக்காக அரசியல் பேசும் ரஜினி' - முத்தரசன் குற்றச்சாட்டு