ETV Bharat / state

ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு! - பிரேத பரிசோதனை

திருப்பத்தூர்: ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Unidentified male body
Unidentified male body
author img

By

Published : Jan 25, 2020, 1:42 PM IST

திருப்பத்தூரை அடுத்த அவ்வை நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் ரயில்வே காவல்துறையினர் நீண்ட நேரமாகியும் வராததால் அப்பகுதியில் உள்ள நாய்கள், அந்த சடலத்தை கடித்து இழுத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ரயிலில் பயணிக்கும்போது தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து சடலத்தை ரயில்பாதையில் வீசி சென்றார்களா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

மேலும் அந்த நபர் யார் என்பதும், அவருடையை விவரங்களை சேகரிக்கும் முயற்சியிலும் ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் அப்பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலாளியை நம்பிச் சென்றவரிடம் பணம் பறித்த கும்பல்!

Intro:Body:

திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு...

திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதிஅருகே ரயில் தண்டவாளத்தின் அருகில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.....

ஆனால் ரயில்வே போலீஸார் நெடுநேரம் வராததால் அப்பகுதியில் உள்ள நாய்கள் சடலத்தை கடித்து இழுத்து அலங்கோல படுத்திய அவலநிலை உருவானதாக அப்பகுதி மக்கள் முகம் சூழித்து சென்றனர்....

மேலும் நெடுநேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து....

இவர் ரயிலில் பயணம் செல்லும் பொழுது கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா??? அல்லது இவரை யாராவது கொலை செய்து சடலத்தை ரயில்பாதையில் வீசி சென்றார்களா???? என்று பல கோணத்தில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

மேலும் இதுபோன்ற சம்பவம் அப்பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.