ETV Bharat / state

ஆம்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தம்பதியினர் படுகாயம் - வேலூர்

வேலூர்: ஆம்பூர் அருகே நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் கணவன், மனைவி ஆகியோர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்குள் வெடித்த நாட்டு வெடிகுண்டு!
author img

By

Published : Aug 8, 2019, 10:18 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் வசித்து வருபவர் குமரேசன். இவர், நேற்று மலை தனது நிலத்தில் முள்ளங்கி அறுவடை செய்துவிட்டு வீடு திரும்பியபோது, வழியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன.

அதை எடுத்துச் சென்ற அவர், வீட்டில் வைத்து பிரித்து பார்த்த போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் அவருக்கு, அவரது மனைவி கவிதாவும் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:

ஆம்பூர் அடுத்த மலைக்கிராமத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்து கணவன் மனைவி படுகாயம் வேலூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்குட்டை வெள்ளக்கல் மலைகிராமத்தை சேர்ந்தவர், குமரேசன் இவர் இன்று மாலை தனது நிலத்தில் முள்ளங்கி அறுவடை செய்து அதை தன் வீட்டிற்கு மலைப்பகுதியை ஒட்டிய நிலத்தின் வழியாக தன் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு

அதை தன் வீட்டிற்கு எடுத்து வந்து பிரித்து பார்த்தபோது அது எதிர்பாரா விதமாக வெடித்துச்சிதறியதில் குமரேசனிற்கும் அவரது மனைவி கவிதாவிற்கு கை, கால் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வெடிச்சத்தம் கேட்டு குமரேசனின் வீட்டிற்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கணவன் மனைவி இருவரையும் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

Conclusion: அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.