வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் பூபதி (40). இவர் நேற்று அப்துல்லாபும் பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த விரிஞ்சிபுரம் காவல்துரையினர், அதே பகுதியை சேர்ந்த ஹரி மற்றும் பிரபு ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .
கைதான இருவர் மற்றும் கொலையான பூபதி ஆகிய மூவரும் நண்பர்கள் என்றும், கடந்த சில நாட்களுக்கு முன் மூவரும் ஒன்றாக மது அருந்திய போது உயிரிழந்த பூபதியிடம் இருந்து நான்காயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை திருடி சென்றதாகவும் அதனை திருப்பிக் கொடுக்கும்படி நேற்று பிரபு மற்றும் ஹரி ஆகியோரிடம் கேட்டுள்ளார்.
இதில் மூவரும் மது போதையில் இருந்ததால் வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஹரி மற்றும் பிரபு ஆகியோர் கல்லால் தாக்கியதில் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இன்று வேலூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:நெல்லை அரசு பள்ளியில் மோதல்... மாணவர் உயிரிழப்பு... 3 மாணவர்கள் மீது வழக்கு...