ETV Bharat / state

ரூ. 10 கோடி மோசடி வழக்கு: கணவன் மனைவி கைது! - fraud

வேலூர்: ஆம்பூரில் தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக பயன்படுத்தி ரூ. 10 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது
author img

By

Published : Aug 18, 2019, 5:55 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த அஷ்பாக், அவரது மனைவி ஷாயிகா மற்றும் அஷ்பாக் சகோதரர்கள் மூன்று பேர் சேர்ந்து ராணிப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக தயார் செய்துள்ளனர். அந்த தொழிற்சாலைக்கு கேஹச்ஈ(KHE) என்ற பெயரை வைத்துள்ளனர்.

அதையடுத்து ஆம்பூரை சேர்ந்த ஷபீக் அகமது, வாணியம்பாடியை சேர்ந்த ஐந்து தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் தனித்தனியாக 2 லட்சம், 1 லட்சம் ரூபாய்க்கு தோல் வாங்கிக்கொண்டு பணம் தருவதாக ஏமாற்றி வந்துள்ளார் அஷ்பாக்.

மோசடி செய்த கணவன் மனைவி கைது!

பின்னர், கடந்த 10 மாதங்களாக தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆறு பேர் ஒன்றன் பின் ஒன்றாக மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரூ. 10 கோடிக்கு தோல் பெற்றுக் கொண்டு அந்த கும்பல் பணம் தராமல் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்தது.

இதன் பேரில் அஷ்பாக் மற்றும் அவரது மனைவி இருவரையும் கைதுசெய்த மாவட்ட குற்றவியல் போலீசார், ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன் முன் அவர்களை ஆஜர்படுத்தி பின் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அஷ்பாக்கின் சகோதரர்கள் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Intro:

ஆம்பூரில் 6 பேரிடம் தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக பயன்படுத்தி 10 கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி இருவர் கைது மேலும் 3 பேர் போலீசார் தேடி வருகின்றனர்Body:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த அஷ்பாக் ,அவரது மனைவி ஷாயிகா மற்றும் அஷ்பாக் சகோதரர்கள் 3 பேர் கைசர் அஹமத், ரபீக் அஹமத், யாசீர் ஆகிய 5பேர் ராணிப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக தயார் செய்து (KH தொழிற்சாலையை) KHE என்ற பெயரை பயன்படுத்தி ஆம்பூர் சார்ந்த ஷபீக் அகமது மற்றும் வாணியம்பாடி சேர்ந்த 5 தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் இடம் தனித்தனியாக 2 லட்சம் 1 லட்சம் ரூபாய்க்கு தோல் வாங்கிக்கொண்டு பணம் தருவதாக ஏமாற்றி வந்துள்ளார் கடந்த 10 மாதங்களாக ஆறு பேர் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர் அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 10 கோடி ரூபாய் தோல் பெற்றுக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றியதாக வந்ததாக தெரியவந்தது இதன் பேரில் கணவன்,மனைவி அஷ்பாக் ,அவரது மனைவி ஷாயிகா இருவரையும் கைது செய்து மாவட்ட குற்றவியல் போலீசார் ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன் முன் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
தோல் தொழிலதிபர்களிடம் தோல் விற்பனை செய்து தருவதாக சுமார் 10 கோடி மோசடி செய்த சம்பவம் தோல் தொழிற்சாலை தொழிலதிபர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.