ETV Bharat / state

வேலூர் பெரிய ஏரியூர் காளை விடும் விழாவில் 22 பேருக்கு காயம்!

வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரிய ஏரியூர் காளை விடும் விழாவில் 22 பேருக்கு காயம்!

author img

By

Published : Feb 16, 2023, 7:13 AM IST

வேலூர்: அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூரை அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று (பிப்.15) நடைபெற்றது. இந்த விழாவுக்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். மேலும் துணை தாசில்தார் ராமலிங்கம், ஒடுக்கத்தூர் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனையடுத்து வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் உலகநாதன், நாட்டாண்மை தசரதன், விழா குழுவினர்களான பாபு, கனகாச்சாரி, விஜயகுமார் உள்பட பலரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் காளை விடும் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. இங்கு 250 காளைகள் கொண்டு வரப்பட்டன.

அந்த காளைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்த பிறகு வாடிவாசலில் இருந்து, ஒவ்வொரு காளைகளாக விடப்பட்டன. அப்போது இளைஞர்கள் தெருவின் இருபக்கங்களிலும் நின்று காளைகளை உற்சாகப்படுத்தினர். இந்த காளை விடும் விழாவில் பங்கேற்று, மாடுகள் முட்டியதில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் 2 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து குறுகிய நேரத்தில் அதிவேகமாக ஓடிய காளைக்கு முதல் பரிசாக 70,000 ரூபாயும், 2வது பரிசாக 50,000 ரூபாய் மற்றும் 3வது பரிசாக 30,000 ரூபாய் என மொத்தம் 75 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர்.

முன்னதாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் நேற்றைய முன்தினம் (பிப்.14) நடைபெற்ற எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் சுரேஷ்குமார் (28) என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். அதேபோல் கீழ்முட்டுகூர் கிராமத்தில் ஜனவரி 17 அன்று நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் வெங்கடேசன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி ஜனவரி 21 அன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் ராணுவ வீரர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.