வேலூர்: கஞ்சா கடத்தலைத் தடுக்க காவல் துறையினர் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையம் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான காவல் துறையினர் டாடா நகரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் இன்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது எஸ் 7 பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருவர் வைத்திருந்த 2 டிராவல் பையை சோதனை செய்ததில் ஒரு கிலோ வீதம் 24 பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்து ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்திச்சென்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டிக்கல் சமாத்(20), சாலுக்கா கொராவ்(28) இருவரையும் கைது செய்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்க உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரித்த வழக்கு.... சிறுமி உயிரிழப்பு