திருநங்கைகளின் பாரம்பரிய கூத்தாண்டவர் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் வருடம் ஒருமுறை நடைபெறுவதுண்டு. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காரணத்தால், இந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெறவில்லை.
எனவே இந்த திருவிழாவை அந்தந்த மாவட்டங்களில் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் ஓல்டு டவுன் பகுதியில், வேலூர் மாவட்ட திருநங்கைகள் அமைப்பின் தலைவர் கங்கா நாயக் தலைமையில், வேணுகோபால் ஆலயம் அருகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இணைந்து கூத்தாண்டவர் கோயிலில் வருடம் ஒருமுறை நடைபெறும் அவ்விழாவில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை பின்பற்றி கும்மி அடித்து, கற்பூரம் ஏற்றி தாலியை அறுத்து அழுது எளிமையாக விழாவை கொண்டாடினர்.
இதையும் படிங்க: முடி திருத்தும் கடைகளை காலை 6 முதல் 1 மணிவரை திறக்க அனுமதியுங்கள்!