ETV Bharat / state

திருப்பத்தூரில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கல்!

திருப்பத்தூர்: வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 987 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசினை அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர்.

tirupattur-pongal-freebies-distributed-by-ministers-nilofer-kafeel-kc-veeramani
திருப்பத்தூரில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கல்!
author img

By

Published : Jan 5, 2020, 11:14 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுடன் சுமார் 2 கோடியே 50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் 2 ஆயிரத்து 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வள்ளிபட்டு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் மஞ்சள், 5 கிராம் உலர் திராட்சை, கரும்பு துண்டு, ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் 987 குடும்ப அட்டைதாரர்களுகு வழங்கினர்.

பின்னர் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, தமிழ்நாடு மக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளைக் கொண்டாட சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ‘நாட்டின் முன்னேற்றத்திற்காக விவசாய, தொழில் துறையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை தமிழ்நாட்டில் கொண்டுவந்து கோடிக்கணக்கான உலக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்’ என்றார். இந்த விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. சம்பத்குமார், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கல்!

இதையும் படியுங்க: பொங்கல் பரிசுகள் வழங்கல் விழா: அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்!

Intro:தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டத்தை வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிப்பட்டு நியாய விலை கடையில் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நீலோபர் கபில், ஆகியோர் பொங்கல் பரிசு திட்டத்தை துவங்கி வைத்து 987 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினர்.
Body:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சுமார் 2 கோடியே 50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் 2245 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக முதலமைச்சர் அவர்களால் 28.11.2018 தொடங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளிபட்டு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையை, 20 கிராம் மஞ்சள், 5 கிராம் உலர் திராட்சை,கரும்பு துண்டு மற்றும் ரூபாய் 1000 ரொக்கப்பணம் பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் 987 குடும்ப அட்டை தாரர்களுகு வழங்கினர்

பின்னர் பேசிய அமைச்சர்கள்

தமிழக மக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை கொண்டாட சாதி மதம் மற்றும் கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை அரசு வழங்கி வருவதாக அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்தார்

பின்னர் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் நாட்டின் முன்னேற்றத்திற்காக விவசாய மற்றும் தொழில் துறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தற்போதைய முதல்வர் இரண்டு முறை தமிழகத்தில் கொண்டுவரப்பட்டு கோடிக்கணக்கான உலக முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்கி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் மேலும் தமிழக முதல்வர்கள் விவசாயி என்பதால் விவசாயிகளின் நலன் கருதி தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்களை குடிமராமத்து பணி மூலம் தூர்வாரப்பட்டு தற்போது பெய்த மழையால் அனைத்து ஏரி குளங்களிலும் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிப் பேசினார்

. இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.