ETV Bharat / state

ஆந்திரா டூ கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்.. பலே கும்பல் வேலூரில் சிக்கியது எப்படி? - Ganja smugglers to Kerala persons arrested

Vellore Kanja arrest: கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மூவரை, கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியவர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 7:43 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (டிச.19) சந்தேகப்படும் படியாக 3 நபர்கள் வெள்ளை நிற பாலித்தீன் பையுடன் நின்று கொண்டிருந்ததை காட்பாடி போலீசார் கவனித்து உள்ளனர். இதனால் அந்த மூன்று நபர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து, விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில், மொத்தம் 14 கிலோ எடையிலான கஞ்சா 6 பண்டல்களில் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த ரஹீம் (வயது 46), உதயகுமார் (40), பட்டன் மாவட்டம் காரியம் சிக்டார் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (41) என்பது தெரிய வந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 14 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்பவர் யார்?, இது போல் கஞ்சா தமிழ்நாட்டிற்கும் கொண்டுவரப்படுகிறதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் 20 பவுன் நகைகளை திருடியவர் கைது..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.