திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே இளம்பெண்களுக்கு ஆபாச காணொலி, குறுந்தகவல் அனுப்பி பெண்களை மாயவலையில் சிக்கவைத்த திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த வினோத் (24) என்ற இளைஞர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
ஏதோ ஒரு எண்ணை அழுத்தி ட்ரூகாலர் செயலி மூலம் பெண்கள் பெயர் வந்தால் அந்த நபருடன் தொடர்புகொண்டு அவர்களுடைய புகைப்படங்களைப் பெற்று அதை வைத்து மிரட்டி பல்வேறு ஆபாச புகைப்படங்களை அனுப்பிவருவது இவரது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்நிலையில் அதுபோன்று அந்நபர் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச காணொலி அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் நாட்டறம்பள்ளி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் சென்னையில் பதுங்கியிருந்த வினோத்தை கைதுசெய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் தற்போது வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணையில் அந்த நபர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களை மாய வலையில் சிக்கவைத்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும், அவருடைய கைப்பேசியை ஆராய்ந்ததில் 100-க்கும் மேற்பட்ட ஆபாச காணொலிகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மும்பை போலீசிடம் சிக்கிய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி!