வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட, காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். இதில், அவர் வைத்திருந்த கைப்பையில், கட்டிங் பிளேயர், கள்ளச் சாவி, இரும்பு ராடு உள்ளிட்டவை இருந்துள்ளது.
இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதியூர் பகுதியில், தங்கவேல் என்பவரது வீட்டில், பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகளை இவர் திருடியிருப்பது தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து 12 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேறு எங்காவது அவர், திருட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது