ETV Bharat / state

சோலார் விளக்குகள் அதிக விலைக்கு விற்பனை: மோசடி கும்பல் கைது - Thiruppathur Lighting Sale

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ஓராண்டாக இணையதளம் மூலம் சோலார் விளக்குகளை அதிக விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை காவல் துறையினர் கைதுசெய்து 50 ஆயிரம் மதிப்பிலான சோலார் விளக்குகளைப் பறிமுதல்செய்துள்ளனர்.

சோலார் விளக்குகள் அதிக விலைக்கு விற்பனை
சோலார் விளக்குகள் அதிக விலைக்கு விற்பனை
author img

By

Published : Jan 7, 2020, 10:22 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், மாதனூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களுடைய அழைபேசி எண்ணிற்கு மோசடி கும்பல் தொடர்புகொண்டு இணையதளம் மூலம் சிறப்புச் சலுகை உள்ளதாகக் கூறி 300 ரூபாய் மதிப்பிலான சோலார் மின்விளக்குகளை மூவாயிரம் ரூபாய் எனவும் சிறப்புச் சலுகையாக ஆயிரத்து 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்றும் கூறி பார்சல் கொண்டுவருபவர் அழைபேசி எண்ணை கொடுத்து விற்பனை செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கு மோசடி கும்பல் அழைப்பு விடுத்து சலுகை குறித்து பேசியுள்ளனர். அதற்கு அவர் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மோசடி நபர்கள் இளங்கோவின் அலைபேசிக்கு தொடர்ந்து அழைப்புவிடுத்து அவரை சரமாரியாக அவதூறாகத் திட்டியுள்ளனர். இது குறித்து இளங்கோ ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதன்பேரில் காவல் துறையினர் வடபுதுப்பட்டு பகுதியில் ஏழு பேரை கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓராண்டாக இணையதளம் மூலம் சோலார் விளக்குகளை அதிக விலைக்கு விற்பனைசெய்து 10 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும், கைதுசெய்யப்பட்ட விஜய், பிரசாத், மணிகண்டன், பசுபதி உள்பட ஏழு பேரிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான சோலார் விளக்குகளைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பெங்களுருவில் சர்வதேச சூதாட்ட தரகர் கைது!

Intro:ஆம்பூர் அருகே 1ஆண்டு காலமாக ஆன்லைன் மூலம் சோலார் விளக்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்த கும்பல் கைது அவர்களிடமிருந்து சுமார் 1 லட்சம் மதிப்பிலான சோலார் விளக்குகள் பறிமுதல்.....Body:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் மாதனூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள பொதுமக்களுடைய தொடர்பு எண்ணை வைத்து ஆன்லைன் மூலம் சிறப்பு சலுகை உள்ளதாக கூறி 300 ரூபாய் மதிப்பிலான மின்விளக்குகளை 3 ஆயிரம் ரூபாய் என கூறி சலுகைகளுக்காக உங்களுடைய செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசாக 1500 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று கூறி முகவரியை பெற்றுக்கொண்டு உங்களுக்கு கொரியர் மூலம் பார்சல் வரும் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவர் தொலைபேசிஎண்ணை கொடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டு மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்...

இதே போன்று ஆண்டுகளாக ஆன்லைன் மோசடியில் செய்து வந்த இந்த கும்பல் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தொழில் செய்துவரும் இளங்கோ என்பவர் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளனர்....

இதனால் இளங்கோவனுடைய அலைபேசியிற்கு சுமார் 5 க்கும் மேற்பட்டவர்கள் செல்போனில் தொடர்புகொண்டு அவரை சரமாரியாக அவதூராக திட்டியுள்ளனர்.... இதைத்தொடர்ந்து இளங்கோ ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதன்பேரில் தொடர்பு எண்களை கண்டு பிடித்து விசாரணை மேற்கொண்ட ஆம்பூர் கிராமிய காவல்துறையினர்.. வடபுதுப்பட்டு பகுதியிலேயே அலுவலகம் ஒன்று இது போன்று செயல்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டதில் அலுவலகத்தில் இருந்த 7 பேரை கைது செய்த ஆம்பூர் கிராமிய ஆய்வாளர் கோகுல்ராஜ் பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது கடந்த 1 வருட காலமாக இந்த ஆன்லைன் விளக்கு விற்பனை செய்து வருவதாகவும் தற்போது வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் இதை தொடர்ந்து
விஜய்,பிரசாத்,விஜய், மணிகண்டன்,பசுபதி, உட்பட 7 பேர் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான விளக்குகளை பறிமுதல் செய்துள்ளனர் தொடர்ந்து ஆன்லைனில் இது போன்ற விற்பனை செய்து வரும் கும்பலில் கண்டு யாரும் ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்......Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.