ETV Bharat / state

அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

வேலூர்: திருப்பத்தூர் அருகே அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
author img

By

Published : Apr 24, 2019, 9:55 AM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அதிமுக பிரமுகரான இவருக்கு கலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இவர் தேர்தலுக்காக சுவற்றில் வரையப்பட்டிருந்த திமுக சின்னத்தின் மீது ஆயில் ஊற்றியதாக, திமுக கட்சியைச் சேர்ந்த வேலுயம்மாள், முருகன், மாதையன், எத்திராஜ் மற்றும் கண்ணகி ஆகியோர் கந்தலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமராஜ் நகருக்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஜெகன்நாதன் வீட்டில் இல்லாததால் காவல் துறையினர், அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.

இதை அறிந்து மனமுடைந்த ஜெகன்நாதன் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில் தண்டவாளத்திலிருந்து அவரது உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள் தற்கொலைக்கு காரணமான திமுகவினரை உடனடியாக கைது செய்யக்கோரி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணாவில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Intro: திருப்பத்தூர் அருகே அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

தற்கொலைக்கு காரணமான திமுகவினரை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து தர்ணா போராட்டம்.

Body:வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் அதிமுக பிரமுகர்.

இவருக்கு கலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர் கடந்த 19.4.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த வேலுயம்மாள, முருகன், மாதையன், எத்திராஜ் மற்றும் கண்ணகி ஆகியோர் திமுக கட்சியை சார்ந்தவர்கள்.

இந்நிலையில் இவர்களின் வீட்டின் சுவரின் மீது தேர்தலுக்காக வரையப்பட்டு இருந்த உதயசூரியன் சின்னத்தின் மீது ஜெகநாதன் என்பவர் ஆயில் ஊற்றியதாக குற்றம்சாட்டி அவரிடம் சண்டையிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆனால் திமுகாவினரே ஆயில் ஊற்றப்பட்டு முன் விரோதம் காரணமாக அந்த பழியை அதிமுகவை சேர்ந்த ஜெகநாதன் மீது கந்தலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கந்தலி காவல்துறையினர் நேற்று காமராஜ் நகர் சென்று ஜெகன்நாதனை காவல்நிலையத்திற்கு வருமாறு அவரது மனைவி மற்றும் உறவினர்களிடையே சொல்லி விட்டுவந்துள்ளனர்.

இதை அறிந்து மனமுடைந்த ஜெகன்நாதன் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள் தற்கொலைக்கு காரணமான திமுகவினரை உடனடியாக கைது செய்யகோரி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Conclusion: தகவலறிந்து வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் தர்ணாவில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் தர்ணாவில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.