தேனி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, 67 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சுருளி ராஜ் (வயது 67) என்ற முதியவர் 2023 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், அந்த வழக்கு விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: தேர்தல் வழக்கு: ராபர்ட் ப்ரூஸ் தரப்பு விளக்கமளிக்க உத்தரவு!
இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை முடிவுற்று, சாட்சியங்களின் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்க்காக போக்சோ சட்டம் 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 ஆயிரம் அபராமும் விதிக்கப்பட்டது. மேலும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் சிறை தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் கருதி, தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி சுருளிராஜ் என்ற முதியவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைப்பு சென்றனர்.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 67 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்