வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சலவன்பேட் பகுதியில் அமைந்துள்ள இரண்டு நியாய விலைக் கடைகளில் வழக்கம் போல பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (செப் 24) அரசின் இலவச அரிசியை வாங்கவதற்காக முதியோர்களும், மற்ற பொருள்களை வாங்க பொது மக்களும் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.
திடீரென ஸ்மார்ட் கார்ட் இயந்திரம் முறையாக வேலை செய்யாததால் நீண்ட நேரம் பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெயிலில் காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள், முதியோர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரண்டு கடை ஊழியர்களையும் கடையின் உள்ளே வைத்து கதவை சாத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர், வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கடையின் உள்ளே இருந்தவர்களை மீட்டனர். இதனையடுத்து ஒவ்வொருவராக அனைவருக்கும் பொருள்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: டிப்-டாப் உடையுடன் நூதனமாக பணத் திருட்டில் ஈடுபட்டவர் கைது