வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தமமுக தலைவர் ஜவாஹிருல்லா பரப்புரை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், இரண்டு மாதங்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் அளிக்காமல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி வருகிறார்.
ஏழை எளிய மக்களின் கல்வியை பறிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்த கல்விக்கொள்கை கல்வியை வியாபார பொருளாக மாற்றும்.
மேலும், இந்தியாவில் அரசு புள்ளி விவரக்கணக்குப்படி 7 கோடி இஸ்லாமியர்களில், 463 முத்தாலாக் மட்டுமே நடந்துள்ளது. எனவே முத்தலாக் தடை மசோதா சிறுபான்மையினரை வஞ்சிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற, தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுவதால் அது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எங்கள் வேட்பாளர் கதிர் ஆனந்த் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கூறினார்.