திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வட்டாச்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வருவாய்த் துறை அலுவலகம், காவல் நிலையம் மற்றும் சிறைச்சாலை ஆகியவை ஒருசேர அமைந்துள்ளது.
மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட மினி லாரி ஒன்று, பல மாதங்களாக வட்டாச்சியர் அலுவலகம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இரவு அந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு, தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வாணியம்பாடி காவல் துறையினர், மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா அல்லது மின் கம்பிகளில் ஏற்பட்ட உறாய்வினால், தீப்பொறிகளில் தீ பற்றியதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்குள்ளும் நுழைந்த கொடூர கொரோனா!