வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மளிகை கடை முருகேசன்(36). இவருக்கு வனிதா (16) பிரித்திகா (14), அபிநயா (10) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். முருகேசனின் மூத்த மகள் வனிதா 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனால் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டத்தின் கீழ் பள்ளியில் அவருக்கு மடிக்கனிணி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, வனிதாவும், பிரித்திகாவும் வீட்டில் அதிக நேரம் மடிக்கணினியை சந்தோஷமாக பயன்படுத்தி வந்துள்ளனர். பிரித்திகா நேற்று வனிதாவிடம் மடிக்கணினி கேட்டுள்ள நிலையில், வனிதா மடிக்கணினியை கொடுக்க மறுத்ததுள்ளார். இதனால் மனமுடைந்த பிரித்திகா வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனைக் கண்ட முருகேசன் கவலைக்கிடமான நிலையில் பிரித்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மடிக்கணினிக்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்கள் மேலோங்கினால் அதிலிருந்து மீள்வதற்குத் சினேகாவின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். அதைத்தவிர தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
இதையும் படிங்க: முள்புதரில் கிடந்த அரசின் இலவச மடிக்கணினிகள்...! - கயவர்களை தேடும் காவல் துறை