ETV Bharat / state

வேலூரில் பிரமாண்ட பூங்கா - ஆட்சியர் தகவல் - Vellore is a magnificent park spread over 85 acres

வேலூர்: தோட்டக்கலைத்துறை சார்பில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பூங்கா உருவாக்கப்பட்ட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலூரில் பிரமாண்ட பூங்கா
வேலூரில் பிரமாண்ட பூங்கா
author img

By

Published : Jan 13, 2020, 1:59 PM IST

வேலூர் மாவட்டம் சமீபத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இருந்த அரசு தோட்டக்கலை பண்ணை, ராணிப்பேட்டை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

எனவே வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பண்ணை இல்லாததால், 85 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அதிக பரப்பளவு கொண்ட தோட்டக்கலை பண்ணை, பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்ணையுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை தோட்டக்கலை மூலம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட அகரம்சேரி கிராமத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாட்டில் தற்போது உள்ள பூங்காக்களில் பரப்பளவை விட இந்த பூங்கா சுமார் 85 ஏக்கர் அமைய உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய பூங்காவாகும். உதாரணமாக அரசு தாவரவியல் பூங்கா உதகையின் பரப்பளவு 55 ஏக்கர், ஊட்டி ரோஸ் கார்டன் 10 ஏக்கர் மட்டுமே ஆகும்.

இந்த பூங்காவில் தமிழ்நாட்டிற்கே உரித்தான மரவகைகள் சங்க இலக்கியம், பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த மரங்கள், செடிகளை நட்டு விதை வங்கி ஒன்று உருவாக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பொலிவிழந்து காணப்படும் தாவரவியல் பூங்கா!

Intro:வேலூர் மாவட்டம்

தோட்டக்கலைத்துறை சார்பில் வேலூரில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பூங்கா மாவட்ட ஆட்சியர் தகவல்Body:வேலூர் மாவட்டம் சமீபத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இருந்த அரசு தோட்டக்கலை பண்ணை ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது எனவே வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பண்ணை இல்லாததால் தற்போது வேலூர் மாவட்டத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்திலேயே முதல் முறையாக அதிக பரப்பளவு கொண்ட தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை யுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா ஒன்றினை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் இதற்காக குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட அகரம்சேரி கிராமத்தில் சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் தற்போது உள்ள பூங்காக்களில் பரப்பளவை விட இந்த பூங்கா சுமார் 85 ஏக்கர் அமைய உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய பூங்காவாகும் உதாரணமாக அரசு தாவரவியல் பூங்கா உதகையின் பரப்பளவு 55 ஏக்கர் ஊட்டி ரோஸ் கார்டன் 10 ஏக்கர் இதுபோன்று மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பூங்காக்களில் பரப்பளவை காட்டிலும் தற்போது அமையவுள்ள இந்த பூங்காவின் பரப்பளவு அதிகமாக காணப்படும் இந்த பூங்காவில் தமிழகத்திற்கே உரித்தான மர வகைகள் சங்க இலக்கியம் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள் ஆகியவை அமைக்கப்படும் மேலும் அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த மரங்கள் மற்றும் செடிகளை நட்டு விதை வங்கி ஒன்று உருவாக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.