ETV Bharat / state

மலக்குழி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் - தூய்மை பணியாளர்கள் நல ஆணையர் பேட்டி!

author img

By

Published : May 31, 2023, 7:54 PM IST

நாட்டில் தூய்மைப் பணியாளர்கள் கழிவு நீரில் இறங்கி உயிரிழப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், இதில் 90 சதவிகித இறப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததால் ஏற்படுகிறது என்றும் தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

tamil nadu
தமிழகம்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவகத்தில், தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று(மே.31) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையர் வெங்கடேசன், "பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்தோம். அவர்களது இல்லங்களையும் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூய்மை பணியாளர் அடையாள அட்டை, பி.எப், இ.எஸ்.ஐ உள்ளிட்டவைகள் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். தேசிய அளவில் தூய்மை பணியாளர் ஆணையம் உள்ளதை போல் தமிழகத்திலும் தூய்மை பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டி ஆளுநர் மற்றும் முதல்வரிடம் மனு அளித்துள்ளோம்.

இதையும் படிங்க: தொடரும் மலக்குழி மரணங்கள்...புது திட்டம் - தமிழக அரசின் அதிரடி முடிவு!

மருத்துவமனை, சமுதாயக்கூடம் ஆகிய கோரிக்கைகளையும் தூய்மை பணியாளர்கள் வைத்துள்ளனர். ஆணையம் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வோம். கூலி குறைவாக அளிப்பது உண்மைதான். 535 ரூபாய் கூலியில், 105 ரூபாய் வித்தியாசம் வருகிறது உண்மைதான். அதில் தொழிலாளிகளுக்கு பி.எப், இ.எ.ஸ்.ஐ தொகை எடுக்கப்படுகிறது.

எட்டு மாதங்களாக பி.எப் பிடித்தம் செய்யப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் எஸ்சி கமிஷனில் புகார் அளிப்போம். பாதிப்புகள் அதிகம் வரும்போது எஸ்சி கமிஷனில் புகார் அளித்து, அதன் அடிப்படையில் சில வேலைகளை செய்து வருகிறோம். எங்களால் விசாரிக்க முடியாத குறைகளை எஸ்சி கமிஷன் மற்றும் மனித உரிமை கழகத்திடம் தெரிவித்து அதன் மூலம் பல அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளோம்.

இதையும் படிங்க: மலக்குழி மரணங்களுக்கு முடிவு எப்போது? வேதனையில் வாடும் தொழிலாளர்கள்!

கழிவு நீரில் இறங்கி உயிரிழப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுவரையில் 225 தூய்மை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மனிதர்கள் கழிவு நீரில் இறங்க கூடாது என தூய்மை பணிக்காக இயந்திரங்களை வாங்கியுள்ளனர். அது விரைவில் பயன்படுத்தப்படும். 90 சதவிகித தொழிலாளர்கள் இறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றபடாததால் ஏற்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்களை அவுட் சோர்சிங் மூலம் பணியமர்த்தாமல், கர்நாடகா, ஆந்திராவை போல் மாநராட்சியே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். அதுபோன்ற திட்டங்களை இங்கும் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் பிரச்சினைகள் தீரும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கரோனா சூழலில் மலக்குழி மரணம்: இந்தியாவில் தொடரும் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.