பெங்களூர் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மோகன் என்பவருக்கும், வேலூரை அடுத்த தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பெங்களூருவில் வாழ்ந்துவந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி தொரப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
எனவே, மனைவியையும், குழந்தையையும் தன்னுடன் அனுப்பி வைக்கவேண்டும் என கூறி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மோகன் தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் தடுத்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.