திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான 3 மதுபான கடைகளில் துணை ஆட்சியர் முனீர் அகமது திடீர் ஆய்வு மேற்கொண்டார் .
ஆய்வு குறித்து அவர் கூறுகையில், மதுபான கடைகளில் பார் வசதி இல்லாததால் மக்கள் சாலையோரங்களிலும், கடை அருகிலும் அமர்ந்து மது அருந்தி அசுத்தம் செய்கிறார்கள். எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பார் வசதி ஏற்படுத்தி அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றதா அல்லது மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ரவுடி கடத்தி கொலை: சிசிடிவி காட்சி வெளியீடு!