வேலூர் இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்ஜித்குமார் என்பவரின் நிலப்பத்திரத்தை விடுவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே 50,000 ரூபாய் கையூட்டு வாங்கிய தனி துணை ஆட்சியர் தினகரன், அவரது ஓட்டுநர் ரமேஷ் ஆகிய இருவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தினகரனிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாயையும், கையூட்டு வாங்கிய 50 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். காரில் வைத்து லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்ப முயன்ற துணை ஆட்சியர் தினகரனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரட்டிச் சென்று பிடித்தனர். தினகரன் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராகப் பணியிட மாற்றம் செய்த பின்னரும், மாறுதல் ஆகாமல் கையூட்டு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூரில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலரிடம் விசாரணை...!