திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் தனியார் பள்ளியில் வாணியம்பாடி தாலுகா சதுரங்கக் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 18 மாவட்டங்களிலிருந்து 350க்கும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
7, 9, 11,13,18 என 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ‘பட்ஜெட் வாசிப்பில் திருக்குறள் பேசினால் மட்டும் நாட்டில் தேனும் பாலும் ஓடாது!’