வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்களுக்கு "பூச்சி மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் கட்டமைப்பு" குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிடப்பகுதிகளைச் சேர்ந்த வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பயிற்சியில் இயற்கை உரத்தை காப்பது, வேளாண்மை சாகுபடி முறைகளைப் பின்பற்றுவது, வேதியியல் உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்கள், இயற்கை முறையில் பூச்சியால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மண்வளத்தை பேணிக்காத்தல், சுற்றுச்சூழலில் உள்ள பல்லாயிரக்கணக்கான நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை பெருக்குவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: நடந்தது என்ன?