ETV Bharat / state

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிளஸ் 2 மாணவிகளுக்கு சிறப்பு சரஸ்வதி யாகம் - Plus 2 exam

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்காக சக்தி அம்மா தலைமையில் சிறப்பு சரஸ்வதி யாகம் நடந்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 25, 2023, 9:49 PM IST

வேலூர்: ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்காக சக்தி அம்மா தலைமையில் சிறப்பு சரஸ்வதி யாகம் இன்று (பிப்.25) நடந்தது. இந்த நிகழ்வுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்களுக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து 3,000 மாணவர்களுக்கு வழங்கினார்.

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிளஸ் 2 மாணவிகளுக்கு சிறப்பு சரஸ்வதி யாகம்

அதன்பின் அவர் பேசியதாவது, ”மாணவர்களாகிய உங்களுக்கு பிடித்த சினிமா ஹீரோ ஒருவராவது இருப்பார். ஆனால், அவர்கள் நிஜத்தில் ஹீரோ இல்லை. நீங்கள் தான் நிஜ ஹீரோ. தன்னைப்போல் மற்றவர்களையும் உயர்த்த நினைப்பவர்கள் யாரோ, அவர்கள் தான் நிஜ ஹீரோ. சமுதாயத்தில் கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

கல்வி மட்டுமே ஒருவருக்கு வறுமையை ஒழித்து நன்மை செய்ய முடியும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு கல்வி தேவை அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக வர வேண்டும். தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த யாகத்தின் மூலம் சரஸ்வதி தேவியின் சக்தி இந்த பேனாவில் இறக்கப்படுகிறது. போருக்குச் செல்லும் வீரருக்கு ஆயுதம் தேவைப்படுவது போல் தேர்வு எழுத செல்லும் உங்களுக்கு இந்த பேனா ஆயுதமாக இருக்கும். கடைகளில் இருக்கும் போது இது ஒரு சாதாரண பேனா. ஆனால் பூஜை செய்த பிறகு சரஸ்வதி தேவியின் பூரண சக்தி கிடைத்து உள்ளது. இதனால் அரிய சக்தி கிடைத்து மகா சரஸ்வதி தேவி உங்களுக்கு துணையாக இருப்பார்.

இதனால் தேர்வு எழுதும் போது உங்களுக்கு பதட்டம் வராது. சிறப்பான முறையில் தேர்வு எழுதி நல்ல நிலையை அடைந்து நீங்களும் உயர்ந்து உங்களை சார்ந்தவர்களையும் முன்னேற்ற வேண்டும்” என்று பேசினார்.

இதையும் படிங்க: ‘மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ - அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.