வேலூர், பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(59). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, கடந்த 18ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக கன்னிகாபுரத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜெயக்குமார் சிகிச்சைப் பலனிற்றி இன்று(மே. 28) காலை சிஎம்சி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு வள்ளியம்மாள் என்கிற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த மார்ச் மாதம் கரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.