வேலூர்: கரோனா தொற்று பரவல் காரணமாக வேலூர் தொரப்பாடியிலுள்ள மத்திய சிறையின் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்க அவர்களது உறவினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிறையிலுள்ள விசாரணை, தண்டனை கைதிகள் தங்களது குடும்பத்தாரிடம் பேசுவதற்காக இணைய காணொளி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்ட நாளில் தகுதி வாய்ந்த கைதிகள் சிறையிலுள்ள கணினி உதவியுடன் குடும்பத்தார், உறவினர்களிடம் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்