வேலூர்: மேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த மார்ச் 16ஆம் தேதி இரவு மருத்துவ மாணவி அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து இரவுக்காட்சி பார்த்துவிட்டு, மார்ச் 17ஆம் தேதி விடியற்காலை 1 மணியளவில் வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் அவர்கள் ஏறிச் சென்ற நிலையில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட ஆட்டோவில் இருந்தவர்கள் இருவரையும் மிரட்டி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, ஆண் நண்பரை தாக்கி செல்ஃபோன், 40 ஆயிரம் ரூபாய், நகை ஆகியவற்றை பறித்தனர்.
பெண் மருத்துவரின் புகார் : மேலும், அப்பெண்ணை அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனையடுத்து, மார்ச் 21ஆம் தேதி இரவு அந்த கும்பலில் இருந்த இருவருக்கு பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறை கண்ட காவல் துறையினர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் பாதிக்கப்பட்ட பெண் மார்ச் 22ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இ-மெயிலுக்கு புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், வேலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
எஸ்பி-யின் அதிரடி உத்தரவு : இதுதொடர்பாக இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது செய்த காவல் துறையினர் நான்கு பேரை சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 24) சந்தோஷ் (22) என்ற இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவிக்காமல் அலட்சியமாக இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் ஜெயகரன், நித்தியானந்தம், சுரேஷ்பாபு ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேலூரில் நள்ளிரவு கொடூரம்: மருத்துவ மாணவி கூட்டுப்பாலியல் வன்புணர்வு - 5 பேர் கைது