ETV Bharat / state

பழிக்கு பழி வாங்க ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை: 6 பேர் கைது! - கொலை வழக்கில் ஆறு பேர் கைது

வேலூர்: மாநகராட்சி அலுவலகம் அருகே ஆட்டோவில் கடத்திச் சென்று ஒருவரை கொலை செய்த வழக்கில் காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட நபர் கொலை

author img

By

Published : Oct 6, 2020, 12:49 PM IST

வேலூர் மாவட்டம் ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சாலமன். இவர் நேற்று (அக். 05) அடையாளம் தெரியாத நபர்களால் ஆட்டோவில் கடத்தப்பட்டார். பின்னர், அவரை வேலூர் மாநகராட்சி அருகே கொலை செய்த கும்பல், அவரது உடலை மாநகராட்சி அலுவலகம் அருகேயே வீசி விட்டுச் சென்றது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர், இந்த வழக்கில் தொடர்புடைய விஜய், பிரவீன்குமார், பிரபாகரன், ஐயப்பன், விக்னேஷ், மணிகண்டன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2018ஆம் ஆண்டு விஜயின் தந்தை முனி என்பவரை சாலமன் கொலை செய்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் சாலமனை கொலை செய்ததாக விஜயும் அவரது நண்பர்களும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை - வெளியான சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.