வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜங்காலப்பள்ளி கிராம விவசாய நிலத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டுயானை விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களைச் சேதப்படுத்திச் சென்றது. இதையறிந்த, விவசாய நிலத்தில் காவல்புரிந்தவர்கள், வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
பின்னர் அவர்கள் வந்து, டார்ச் லைட், பட்டாசு, தீப்பந்தங்கள் ஏந்தி யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து ஒற்றை காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது.
இதனைத்தொடர்ந்து, ஒற்றை காட்டுயானையை வேறு வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மீன்களையும் விட்டு வைக்காத கரோனா வதந்தி - கலக்கத்தில் மீனவர்கள்!