ETV Bharat / state

'கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு - cooperative department

வேலூர்: கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது என்றும் ஒரு பைசாவானாலும் கணக்கு காட்டியாக வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டச் செய்திகள்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு  vellore district news  sellur raju  minister sellur raju
'கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது'- அமைச்சர் செல்லூர் ராஜு
author img

By

Published : Aug 14, 2020, 4:24 PM IST

கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்றுவரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகதத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது. இதில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி, கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டன. 6,459 பேருக்கு பயிர் கடனாக சுமார் 23 கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "ஒரு லட்சத்து 72 ஆயிரம் விவசாயிகளுக்கு 1,555 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு 135 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் தொகை செலுத்துவதில் ஆறு மாதம் விலக்கு- அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத் துறையில் சிறு வணிக கடன் பெற்றவர்களுக்கு கடனைத்திருப்பிச் செலுத்த ஒரு வருடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் 6 மாதம் கடன் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது. ஒரு பைசாவாக இருந்தாலும் கணக்கு காட்டியாக வேண்டும். தற்போது கூட்டுறவுத்துறையில் சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் கூட்டுறவுத் தேர்தலில் பேட்டியிட முடியாது" என்றார்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்பட பலர கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ’கரோனாவிலிருந்து 80 விழுக்காடு மக்கள் குணமடைந்து வருகின்றனர்’ - சுகாதாரத்துறை செயலர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.