ETV Bharat / state

காட்பாடி அருகே சோகம்: ஓடையில் குளித்த சிறுவன் பலி - ஓடை

வேலூர்: காட்பாடி அருகே ஓடையில் குளித்த பத்து வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதமாக பலியானர்.

File pic
author img

By

Published : Jun 9, 2019, 7:23 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பழைய காட்பாடியை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் நெடுமாறன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறான். நேற்று (ஜூன் 8) பள்ளி விடுமுறை என்பதால் நெடுமாறன் வீட்டிற்கு தெரியாமல் ஓடையில் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக நெடுமாறன் நீரில் மூழ்கி பலியாகி இருக்கிறான்.

இதையறியாத நெடுமாறனின் பெற்றோர் மகனைக் காணவில்லை என காட்பாடி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஓடையில் குளித்த சிறுவன் பலி

இந்நிலையில் இன்று (ஜூன் 9) காலை ஈசன் ஓடை பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு காமாட்சியை வரவழைத்து அது நெடுமாறன் தானா என்பதை உறுதிசெய்தனர். பின்னர் நெடுமாறன் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:காட்பாடி அருகே சோகம்

ஓடையில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Body:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி . இவரது மகன் நெடுமாறன்(10) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தான் இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நெடுமாறன் தனது வீட்டுக்கு தெரியாமல் நேற்று பிற்பகல் காட்பாடி அடுத்த ஈசன் ஓடை பகுதியில் உள்ள ஓடையில் குளிக்க சென்றுள்ளான் அப்போது எதிர்பாராதவிதமாக நெடுமாறன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இதை அறியாத அவரது தாய் காமாட்சி வெளியில் சென்ற தனது மகனை காணவில்லை என்று பரிதவித்தார் நேற்று இரவு ஆகியும் வீடு திரும்பாததால் நெடுமாறன் வீட்டில் அனைவரும் பதட்டம் அடைந்தனர். இதையடுத்து காட்பாடி காவல் நிலையத்தில் காமாட்சி தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தார் அதன் அடிப்படையில் காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் இன்று காலை ஈசன் ஓடை பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர் இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காட்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர் மேலும் காமாட்சியை வரவழைத்து நெடுமாறன் தானா என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர் மகனை சடலத்தில் பார்த்த தாய் காமாட்சி கதறி அழுதார் இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர் 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.