வேலூர்: ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில் சக்திவேல் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
கரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து கள பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்க ஆசிரியர் சக்திவேல் நினைத்தார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவான இன்று தூய்மைப் பணியாளர்களை அவர் அழைத்து, பள்ளியில் தேசியக்கொடி ஏற்றவைத்து கௌரவித்தார். இதையடுத்து, ஆசிரியர் சக்திவேலுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
மேலும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆசிரியர் சால்வையும் அணிவித்தார்.
மேலும், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் வீட்டிற்கே சென்று பரிசுப் பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க: 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண் - முதலமைச்சர் திறந்து வைப்பு