ETV Bharat / state

வேலூரில் திமுக - அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு.. 7 அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு! - வேலூர் கவுன்சிலர்கள்

Vellore Corporation Councilors Meeting: வேலூர் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 7 அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வேலூர்
வேலூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 6:18 PM IST

வேலூரில் திமுக - அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு.. 7 அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

வேலூர்: வேலூர் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜன.12) நடைபெற்றது. இதற்கு மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் மற்றும் ஆணையர் ஜானகி தலைமை தாங்கினர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒன்றாவது மண்டல குழு தலைவர் பேசுகையில், "எனது மண்டலத்தில் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை, மின் விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் சுஜாதா, "ஒரு ஆளும் கட்சி உறுப்பினரே எதிர்கட்சி போல் எப்போதுமே திமுக அரசை குறை கூறி பேசி வருகிறார். அரசை அவமானப்படுத்துவது போல் பேசுகிறீர்கள், இது சரியல்ல" என்றார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதால் அவையில் கூச்சல் ஏற்பட்டது. பின்னர் தனக்கு அவையில் உரிய மரியாதை இல்லை என வெளியேற முயற்சித்தார்.

பின்னர் ஒன்பதாவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமேஷ் பேசுகையில், "எனது வார்டில் 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் இதுவரை இரண்டரை ஆண்டுகளாக எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேயரை கேட்டால் குழந்தை மாதிரி நடந்து கொள்கிறார். மாற்றி மாற்றி பதில் சொல்கிறார். இரண்டரை ஆண்டு ஆகியும் புதியதாக வந்த மேயர் அப்படியே தான் இருக்கிறார்" என பேசினார்.

அப்போது மாநகராட்சி தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டு ஆகவில்லை. அதிமுக உறுப்பினர் பொய்யான தகவலை சொல்வதாக கூறி அதிமுக உறுப்பினரை திமுக உறுப்பினர்கள் அமர சொன்னதால் இரு கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர் பேச முயற்சித்த போது, அவரிடம் இருந்து மைக்கை பிடுங்க திமுக உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து, வார்டில் மேற்கொள்ளப்படாத பணிகள் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு உரிய பதில் கிடைக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுக்கு பிறகு ஏழு அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடுடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.