ETV Bharat / state

நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து ரூ.50ஆயிரம் பறிமுதல்

author img

By

Published : Sep 24, 2019, 9:35 PM IST

வேலூர்: ஆற்காடு அடுத்த மேல்நேத்தம்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ. 50ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

சோதனை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்நேத்தம்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்கு ஒன்று செயல்படுகிறது. இந்த கிடங்கில் விற்பனை செய்யப்படும் அம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்

அப்போது கணக்கில் வராத பணம் ரூ.50,600 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், நுகர்பொருள் வாணிபக் கிடங்கு பொறுப்பாளர்அறிவழகன் பொதுமக்களிடம் சிமெண்ட் மூட்டைக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதும், விதியை மீறி கள்ளச்சந்தையிலும் சிமெண்ட் மூட்டைகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

Intro:வேலூர் மாவட்டம்

ஆற்காடு அருகே நுகர்பொருள் வாணிப கழக குடோனில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை - சிமெண்ட் மூட்டைகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த பொறுப்பாளர் சிக்கினார் - கணக்கில் வராத ரூ.50,600 பணம் பறிமுதல்Body:வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்நேத்தம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அம்மா சிமென்ட் விற்பனை செய்வதில் முறைகேடு நடந்துவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலமையில் ஆய்வாளர்கள் விஜய், பிரியா, ரஜினி ஆகியோரடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.50,600 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து நுகர்பொருள் வாணிப கிடங்கு பொறுப்பாளர் அறிவழகணிடம் விசாரணை மேற்கொண்டு வரும் லஞ்சதுறையினர் கனக்கில் வராத ரூபாய் 50,600 பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அறிவழகன் பொதுமக்களிடம் சிமெண்ட் மூட்டைக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது மேலும் விதியை மீறி கள்ளச்சந்தையிலும் சிமெண்ட் மூட்டைகளை விற்பனை செய்து வந்துள்ளார் இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரிலேயே இன்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.