வேலூர் மாவட்டம் அண்ணாசாலையில் உள்ள உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் பரமாநந்தம் (52).
இந்நிலையில் அரசு அலுவலர்களிடம் பரமாநந்தம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையில் ஆய்வாளர் விஜய் ஆகியோர் உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்திலிருந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது பரமாநந்தமிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்து வரிக்கு லஞ்சம்! - வருவாய் ஆய்வாளர் கைது!