வேலூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி சுமார் 33 வயதுடைய ஆண் ஒருவர் என இரண்டு பேர் கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி அரசு தலைமை மருத்துவமனை தனி பிரிவில் கடந்த இரண்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டிக்கு அனுப்பப்பட்டது.
சென்னை தாம்பரத்தை சேர்ந்த மருத்துவ மாணவியின் சகோதரி அண்மையில் கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் இருந்து வந்ததால் அவரை சென்று சந்தித்த மருத்துவ மாணவிக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்றும், அதேபோல் 33 வயது ஆணும் 15 நாட்களுக்கு முன்பு தென்கொரியாவில் இருந்து வந்துள்ளதால் வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர்களிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் இருவருக்குமே கரோனா பாதிப்போ, அறிகுறியோ இல்லை என தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை) வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 102 பேர் இதுவரை வீடுகளில் வைத்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க: ரயில் நிலையங்களில் கரோனா முன்னெச்சரிக்கை தீவிரம்!