ETV Bharat / state

'பணி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் மனு' - கவுரவ விரிவுரையாளர்கள்

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி பல்கலைக் கழக பதிவாளரிடம் பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மனு அளித்தனர்.

Thiruvallur university
author img

By

Published : Jun 18, 2019, 11:41 AM IST

வேலூர் மாவட்டம், காட்பாடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைகழகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 130 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரக்கோணம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி ஆகிய நான்கு உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 122 கவுரவ விரிவுரையாளர்களை பல்கலைக்கழகம் திடீரென பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பல்கலைகழக நிர்வாகம் தங்களை பணிநீக்கம் செய்ததாக விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டதால் தங்கள் குடும்ப சூழ்நிலை, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி நேற்று (ஜூன் 17) திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளரை சந்தித்து மனு அளித்தனர்.

Intro:வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 122 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்

மீண்டும் பணி வழங்க கோரி பல்கலை பதிவாளர் முறையிட்டனர்

Body:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேற்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது இந்த பல்கலைகழகத்தின் கீழ் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 130 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரக்கோணம் திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி திட்டக்குடி ஆகிய நான்கு உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 122 கவுரவ விரிவுரையாளர்களை பல்கலைக்கழகம் திடீரென பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்ததாக விரிவுரையாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர் இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தமிழ் குடும்ப சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இன்று 50க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி வழங்க கோரி இன்று திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளித்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.