ETV Bharat / state

மேம்பால பணிக்காக அமைக்கப்பட்ட 7 அடி பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ஏழு அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

relatives-struggle-as-one-falls-into-the-pit-for-bridge-work

author img

By

Published : Feb 19, 2020, 11:54 AM IST

ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). டிவி மெக்கானிக்காக வேலை பார்த்துவரும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இவர் நாட்டறம்பள்ளி பகுதியில் டிவி மெக்கானிக் வேலை பார்த்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். ஜோலார்பேட்டை நெடுஞ்சாலை வழியில் அவர் செல்லும்போது, அவ்வழியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட 7 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள், மேம்பால அமைக்கும் ஒப்பந்ததாரரின் அலட்சியப் போக்கால்தான் விபத்து நடந்தது என்று கூறி நாட்டறம்பள்ளி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செல்வராஜின் உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், செல்வராஜின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேம்பால பணிக்காக அமைக்கப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின், செல்வராஜின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேம்பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளங்களை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நாய்க்கு மயக்க பிஸ்கட்... 137 சவரன் நகைகள் கொள்ளை... பிடிபட்ட மதுரை பட்டறை சுரேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.