வேலூர் மாவட்டம் ஆசனாம்பட்டு கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (30). இவரது மனைவி பிரபாவதி. வெங்கடேசனுக்கும் பிரபாவதிக்கும் இடையே நேற்று (மார்ச் 25) தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட வீட்டைவிட்டு வெளியேறிய வெங்கடேசன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், குடும்பத்தினர் இன்று (மார்ச் 26) காலை வெங்கடேசனை பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே இருந்த வயல் வெளியில் நாட்டுத்துப்பாக்கியால் வெங்கடேசனின் மார்புப் பகுதியில் சுடப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
காவல் துறையினருக்குத் தெரியாமல் வெங்கடேசனின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயன்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறு: நாமக்கல்லில் தம்பியைக் கொன்ற அண்ணன்!