ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இன்று காலை மருத்துவமனையில் செவிலி கல்பனா (33) என்பவர் நோயாளிகளுக்கு ஊசி போடும் பொழுது தனது செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்டுள்ளார்.
இதனைக் கண்ட அங்கு வந்திருந்த பொதுமக்களில் ஒருவர், தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பயன்பாட்டாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளிகளின் உடம்பில் கவனக்குறைவுடன் ஊசி செலுத்தினால், ஊசி உடைந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில், அரசு மருத்துவமனை செவிலியின் இந்த அலட்சியப்போக்கு சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த செவிலி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அசுரவேக சிற்றுந்துவால் விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி