ETV Bharat / state

ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு! - ranipet children drowned

ராணிப்பேட்டை: வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ranipet-3-children-died-by-drowning-in-vedanthangal-lake
ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!
author img

By

Published : Jan 5, 2020, 4:55 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித் தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (10), சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7) ஆகிய மூவரும் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர்.

இந்நிலையில், விடுமுறை தினமான இன்று மூவரும் சேர்ந்து அருகே உள்ள வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசன் நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஸ்வினி, ஜெயஸ்ரீ ஆகியோர் தமிழரசனை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், நீச்சல் தெரியாததால் மூவரும் நீரில் மூழ்கியபடி உயிருக்குப் போராடியுள்ளனர்.

அச்சமயம் அவ்வழியே வந்த வெங்கடேசன் என்பவர், பொதுமக்கள் உதவியுடன் சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

அங்கு சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர், மூன்று பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாணாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சிறுவர்களின் சடலங்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது.

ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

இதையும் படிங்க: கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

Intro:இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்

சோளிங்கர் ஏரியில் முழுகி மூன்று சிறிவர்கள் பலி _ துணி துவைக்க சென்றபோது நேர்ந்த சோகம்Body:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியை சேர்ந்தவர் தேசன் கூலி தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15) அதே பகுதியை சேர்தவர்கள் உலகநாதன் இவரது மகள் ஜெயஸ்ரீ(10) , சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7). அஸ்வினி, ஜெயஸ்ரீ,
தமிழரசன் இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனா் இந்நிலையில் இன்று விடுமுறையில் வீட்டில் இருந்த மூவரும் அருகே உள்ள வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைப்பதற்காக சென்றனா் அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசன் நீரில் முழு்கியுள்ளார் இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அஸ்வினி ஜெயஸ்ரீ ஆகியோர் இவனைகாப்பார்ற முயன்றுள்ளனா் ஆனால் நீச்சல் தெரியாததால் இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். அப்போது அவ்வழியாக சென்ற வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொதுமக்கள் உதவியுடன் அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவர் மூன்று பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா் இது குறித்து பாணாவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். மூவரின் சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவ்களின் நெஞ்சை உலுக்கியது ஒரே கிராமத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீரில் இருந்து மீட்டுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.