ETV Bharat / state

ராஜிவ் கொலை வழக்கு... ஏழு பேர் விடுதலையாக நாளைக்குள் சாத்தியம்: வழக்கறிஞர் புகழேந்தி - Rajiv gandhi

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரும் நாளைக்குள்(ஜனவரி 30) விடுதலை ஆவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.

ஃப
ஃப
author img

By

Published : Jan 29, 2021, 9:08 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் வேலூரில் உள்ள சிறைகளில் வைத்து சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி, 'முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதிகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தற்போதைக்கு அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ஆம் ஆண்டு ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 09 செப்டம்பர் 2018அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

இச்சூழலில் தற்போது உச்ச நீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் ஆளுநர் விடுதலை குறித்து முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இதற்கான உத்தரவு தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் கிடைக்க ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே நாளை(ஜனவரி 30) ஏழு பேரும் விடுதலை ஆவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. மேலும் ஆளுநர் தங்களை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருக்கின்றனர். நளினியை நான் சந்தித்தேன். அவரும் அதே நம்பிக்கையுடன் உள்ளார்.

தொடர்ந்து விடுதலை செய்யப்படும் முன்பு ஒரு அரசாணை வெளியிடப்படும். அதன்படி ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள். இதில் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் ஜெயகுமார் நிரந்தரமாக சென்னையில் வசிப்பதால், இவர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இருக்காது என்று நினைக்கிறேன்.

புகழேந்தி

முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அரசாங்கம் திருச்சி முகாம் அல்லது வேறு ஏதேனும் பொதுவான முகாமில் தங்க உத்தரவிடலாம். அதன்பிறகு அவர்கள் விரும்பிய நாட்டிற்குச் செல்ல தமிழ்நாடு அரசோ அல்லது இந்திய அரசோ அனுமதி அளிக்கலாம்' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.