ETV Bharat / state

ராஜிவ் கொலை வழக்கு: உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்! - rajiv gandhi murder case

வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் முருகன் தனது உண்ணாவிரத்தை கைவிட்டார்.

முருகன்
author img

By

Published : Nov 16, 2019, 6:41 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்றுவரும் முருகன், தன்னை தனிச்சிறையிலிருந்து பழைய சிறைக்கு மாற்றக்கோரி கடந்த ஆறு நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அதன் காரணமாக அவர் தினமும் உணவு எடுத்துக் கொள்ளாமலிருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானது. இதனால் உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்டு முருகன் தற்போது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

இவரது அறையில் கடந்த மாதம் செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டதால் தன்னை தனிச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே சிறை நிர்வாகத்தைக் கண்டித்தும் மீண்டும் பழைய சிறைக்கு மாற்றக்கோரியும் முருகன் ஏற்கனவே ஒருமுறை உண்ணாவிரதமிருந்து அதை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கிய முருகன்!

Intro:வேலூர் மாவட்டம்

சிறையில் முருகன் உண்ணாவிரத்த்தை கைவிட்டார்Body:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், தன்னை தனிச்சிறையில் இருந்து பழைய சிறைக்கு மாற்ற கோரி கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். அதன் காரணமாக அவர் திணமும் உணவு எடுத்து கொள்ளாமல் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானதால் உண்ணாவிரத்தரதை கைவிடும்படி சிறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று கொண்டு முருகன் தற்போது உண்ணாவிரத்த்தை கைவிட்டுள்ளார். இவரது அறையில் கடந்த மாதம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதால் தன்னை தனிச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக முருகன் குற்றம்சாட்டியிருந்தார். எனவே சிறை நிர்வாகத்தை கண்டித்தும் மீண்டும் பழைய சிறைக்கு மாற்றக்கோரியும் முருகன் ஏற்கனவே ஒருமுறை உண்ணாவிரதம் இருந்து அதை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.