ETV Bharat / state

முருகனின் தந்தை இறப்பு: இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதி மறுப்பு

author img

By

Published : Apr 27, 2020, 8:59 PM IST

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்க்க முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

murugan request to see fathers funeral rejected

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன் (எ) ஸ்ரீகரன். அவரது தந்தை வெற்றிவேல் (75) கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று (27.04.2020) காலை இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த தனது தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர், சிறைத்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், முருகன். இதையடுத்து அவரது கோரிக்கை அரசின் சார்பாக நிராகரிக்கப்பட்டு சட்டத்தில் இடமில்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தகவல் தெரிவித்தார்.

இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதி மறுப்பு

முன்னதாக முருகனின் தந்தை உயிரோடு இருக்கும்போது, அவரிடம் கடைசியாக வீடியோ காலில் பேச கடந்த 25.04.2020 அன்று அனுமதி கேட்கப்பட்டு, அதுகுறித்து எந்தப் பதிலும் அரசு தராதது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... உயிருக்குப் போராடும் தந்தையுடன் பேச முருகன் கோரிக்கை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.