ETV Bharat / state

20ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்! - rajiv gandhi murder accused murugan fasting to meet nalini

வேலூர்: ராஜிவ் கொலை கைதி முருகன் 20ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

murugan fasting for twentieth day to meet nalini

author img

By

Published : Jun 20, 2020, 12:50 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன் காணொலி மூலமாக பேச அனுமதிக்க கோரி கடந்த 1ஆம் தேதி முதல் இன்று (ஜுன் 20) வரை 20ஆவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரம் மேற்கொண்டு வருகிறார்.

நளினி, முருகனின் சந்திப்பு மாதம் இருமுறை நடைபெற்று வந்தது. தற்போது கரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர்களது சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதால் உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் சிறைதுறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

முருகனுக்கு இதுவரை ஐந்து பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூன் 19) மேலும் ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

இதையும் படிங்க... சிறையில் முருகனுடன் நளினி சந்தித்துப் பேச அனுமதி கோரி ஆட்கொணர்வு மனு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.