ETV Bharat / state

மீண்டும் பிணை மனு விண்ணப்பித்துள்ளோம் -பேரறிவாளன் தாய் தகவல்!

author img

By

Published : Jan 12, 2020, 5:38 PM IST

வேலூர்: இரண்டு மாத பரோல் முடிந்து பேரறிவாளன் சிறைக்கு செல்வதால், மீண்டும் பிணை மனு விண்ணப்பிதுள்ளதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்ச் சந்திப்பு
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்ச் சந்திப்பு

ராஜீவ் கொலை குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், இரண்டு மாத பிணைக்கு பிறகு இன்று புழல் சிறைக்கு திரும்பினார். இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இரண்டு மாத பிணை முடிந்து இன்று என் பிள்ளை சிறைக்கு செல்கிறார். கடந்த 29 வருடங்களுக்கு முன்பாக விசாரித்துவிட்டு அனுப்புகிறேன் என்று கூட்டி சென்றார்கள்.

தற்போது அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் வருகின்ற 21, 22ஆம் தேதிகளில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக மறுபடியும் பிணை நீட்டித்து கேட்டோம், கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். நேற்றுவரை எந்த தகவலும் தெரியவில்லை.

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்ச் சந்திப்பு

தமிழ்நாடு முழுவதும் மக்கள் பொங்கல் விழா குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். நாங்களோ பேரறிவாளனுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

எனது மகன் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு இருப்பதால், இன்னும் கூடுதலாக ஒரு மாதம் பிணை வேண்டும். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனது மகனை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அதனால் இந்த அரசு எனது மகன் விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி - துடிதுடித்த ராணுவ வீரர்!

Intro:Body:இரண்டு மாத பரோல் முடிந்து சிறை திரும்பிய பேரறிவாளன் தாய் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது....

பரோல் இரண்டு மாத முடிந்து இன்று என் பிள்ளை சிறைக்கு செல்கிறார் நாளை மறுநாள் பொங்கல் இருப்பான் என்று நினைத்தேன் இது 29-வது பொங்கல் இந்த பொங்கலுக்காவது இருப்பான் என்று எதிர்பார்த்தேன் கடந்த 29 வருடங்களுக்கு முன்பாக விசாரித்துவிட்டு அனுப்புகிறேன் என்று கூட்டி சென்றார்கள்....

அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கு வருகின்ற 21, 22 ந் தேதி மருத்துவமனையில் சேர்க்க வேண்டி நிலை இருக்கிறது அதனால் அவரை ஐந்து நாளாக காவேரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உடன் நாங்கள் இருந்தோம்....

மறுபடியும் பரோல் நீட்டித்து கேட்டோம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம் நேற்றுவரை எந்த தகவலும் தெரியாத நிலையில் வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தோம் ஏனென்றால் குழந்தையுடன் ஒரு நாளாவது இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை நிச்சயமாக இந்தப் பரோல் கிடைக்காமல் போகும் என்று நினைவிக்கவில்லை...

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். நாங்கள் எத்தனை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை இந்த பொங்கல் விழாவிற்கு. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் எனது வீட்டுக்காரர் என் பையன் என்னுடன் இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்வேன் என்று கூறினார் மருத்துவர்கள் ஒரு ஊசியில் சரிசெய்து விடலாம் என்றார்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை வீட்டுக்கு போலாம் போலாம் என்றார் வந்துவிட்டோம் இதுக்கு மேல அந்த வைத்தியம் தொடர வேண்டும் எனது பிள்ளைக்கும் யூரின் இன்பெக்சன் சீக்கிரம் கவனிக்க வேண்டியுள்ளது. புண் ஆகி விட்டுள்ளது என்றார்கள் மருத்துவர்கள் தொடர்ந்து மருத்துவம் பார்க்க வேண்டும். அதற்காக இந்த பரோலை கூட்டி கொடுத்து இருந்தால் வசதியாக இருக்கும் நடக்கவில்லை இருந்தாலும் என் பிள்ளை விரைவில் விடுதலை ஆகுவதற்கு தமிழக அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் அம்மா எனது கையை பிடித்து உன் பிள்ளை உன்னுடன் சேர்க்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தது அனைவருக்கும் தெரியும் அந்த நம்பிக்கையில் தான் இதுவரை நான் காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன் அந்த நம்பிக்கை இன்னும் தொடர்ந்து இருக்கு எனது மனசு இந்த அரசு எனது மகன் விடுதலைக்கு விரைந்து முடிக்க முடிவெடுக்க வேண்டும் இதேபோல் என்னால் இதே நிலையில் தொடர முடியாது ஏனென்றால் எனக்கு 72 வயசு எனது கணவருக்கு 78 வயதாகிறது. வாழ்க்கை என்பது நிலையில்லாதது என் குழந்தையுடன் கொஞ்ச நாளாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் வேறு எதுவும் நான் கேட்கவில்லை அதுகூட 29 ஆண்டுகள் அந்த வாய்ப்பு இல்லை அரசு இதை கருத்தில் கொள்ள வேண்டும் என் குழந்தையுடன் வாழ்ந்த அந்த கொஞ்ச நாள் ஆகும் விரைந்து வரவேண்டும் அரசு துணை நிற்கும் என்று நம்புகிறேன் இந்த பரோலை நீட்டிப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன் இந்த பொங்கல் விழாவை எனது மகன் கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தேன் வருத்தம் இன்று 29 ஆண்டுகள் அனுபவித்திருக்கிறோம் அனைவருக்கும் தெரியும் இனிமேலும் முடியுமா என்று தெரியவில்லை எங்களுக்கும் இயலாமை அதிகமாக இருக்கிறது அதனால் எனது மகனுடன் விடுதலை நிரபராதி என்று தியாகராஜன் அபிடவிட் தாக்கல் பண்ண உடனே விடுதலையாகும் நினைத்தேன் இப்பொழுது அந்த எண்ணங்களை வைத்து விரைந்து விடுதலை செய்ய தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என் மகன் அநியாயமாக இந்த தண்டனையை அனுபவித்து வருகிறான் என்பது அனைவருக்கும் தெரியும் அவனுடைய விடுதலையே எதிர்பார்க்கிறேன்.....

என்று கூறினார்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.